×

அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு; குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவருக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவருக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி திருநகர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், திருநெல்வேலி திருநகர் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு விண்ணப்பித்தேன்.

குடிசை மாற்று செயற்பொறியாளர், அதிகாரிகள், அந்த திட்டத்தில் என்னை தேர்வு செய்தனர். வீடு கட்டுவதற்கான ஒப்பந்தத்தை செயற்பொறியாளர்களில் உறவினர் ஒருவர் மூலம் வீடு கட்ட வைத்தனர். இந்த திட்டத்தில் வீடு கட்டுவதற்கு 4 தவணையாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் தருவதாக கூறினார்கள். வீட்டு ஆரம்ப பணிகள் ஆரம்பித்து 2 தவணையாக ரூ.1 லட்சம் பெற்றேன். பின்னர் பணம் வழங்கப்படவில்லை. இதில் குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

உதவி செயற் பொறியாளர்களிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து மீதி தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கானது நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டிற்கு உள்ளான குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவருக்கு தலா ரூ. 50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அனைவருக்கும் வீடு திட்டத்தில் உரிய வழிகாட்டுதலை பிறப்பித்து திட்டம் பயனாளிகளை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, அபராத தொகையை மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு பயன்படுத்த கொள்ள உத்தரவிட்டார். குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது நெல்லை எஸ்.பி., வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு; குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவருக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Shack Replacement Board Engineers ,Madurai ,Shack Replacement Board ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...